சமுா்த்தி அபிவிருத்தித் திணைக்களம்
அறிமுகம்
2013ம் ஆண்டின் 01ம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் மூலம் சமுா்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தாபிக்கப்பட்டுள்ளது. இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட பிரதான குறிக்கோளானது தனிநபர், குடும்பம், குழுக்கள் மற்றும் மக்களை மையமாக் கொண்ட வாழ்தார பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் வறுமை நிலையினை ஒழித்தல் மற்றும் சமூக சமத்துவத்தினை உறுதிப்படுத்துகின்ற சமுதாயம் ஒன்றினை உருவாக்குவதாகும்.
மேலுள்ள பிரகாரமான நோக்குடன் சமுா்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படுகின்ற வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் கீழ் நாட்டின் 25 மாவட்டங்களிலும் கீழுள்ள பிரகாரம் 10 பிரதான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
- வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டம்.
- சந்தைப்படுத்தல் அபிவிருத்தி வேலைத்திட்டம்.
- சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம்.
- சமுதாய அடிப்படை அமைப்பு வேலைத்திட்டம்.
- தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டம்.
- பயிற்சி மற்றும் செயற்திறன் அபிவிருத்தி வேலைத்திட்டம்.
- ஊடக வேலைத்திட்டம்.
- சமுதாய அடிப்படை வங்கி வேலைத்திட்டம்.
- சமூக நலன்புரி வேலைத்திட்டம்.
- சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம்.














